தமிழ் இலக்கியங்களில் மறைந்திருக்கும் அரசியல் சிந்தனைகள் பல்வேறு விதமாக நமக்கு வழிகாட்டுகின்றன. பண்டைக்காலத்தில், அரசர், அமைச்சர்கள் மற்றும் மக்கள், அவரவர் பங்கினை எவ்வாறு செவ்வனே செய்தனர் என்பதைக் காப்பியங்கள் வாயிலாக அறியலாம். தமிழ் அரசர்களின் நெறி தவறாத, செம்மை மிக்க அரசாட்சிகளுக்கு சான்றுகள் பல இருப்பினும், அறியப்படாத சிலவற்றை அறிவோம். ஐம்பெருங்காப்பியங்களில், சிலப்பதிகாரத்தில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என அரசியல் அறம் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். காவலன் காவல் இன்றெனில் இன்றாம், மாதவர் நோன்பும் மடவார்தம் கற்பும் என்றபடி, அரசன் நன்முறையில் ஆட்சி செய்தால் மட்டுமே பெண்டிர் முதல் துறவியர் வரை அனைவரும் எக்கவலையுமின்றி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இன்றும் நம் எல்லைக்கண் வீரர்கள் இரவு பகல் பாராமல், குளிரையும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் காவல் இருப்பதால் மட்டுமே நாமும் இங்கு நம் பணியில் அமைதியாக ஈடுபட முடிகின்றது.
Shanlax (Sun,) studied this question.