வேலைகாரி நாடகம், கீழ்த்தட்டு சமூகத்தைச் சேர்ந்த வேலைக்காரி பெண் சந்திக்கும் பொருளாதாரசுரண்டல், உரிமை மறுப்பு, பாலியல் சீண்டல், ஆணாதிக்கம் மற்றும் வர்க்க வேறுபாடு போன்ற சமூகஅநீதிகளை வெளிப்படுத்துகிறது. மேல்தட்டு சமூகத்தின் அதிகார மனப்பாங்கும், அதனால் பெண்களின் உடலும் உழைப்பும் பொருளாக மாற்றப்படுவதும் நாடகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. பெண் கதாபாத்திரங்கள் வாயிலாக பெண்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு, எதிர்ப்பு மனநிலை மற்றும் சுயமரியாதை உணர்வு முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகமாறும் சமூக மனப்பாங்கும் விமர்சிக்கப்படுகிறது. அண்ணாவின் சீர்திருத்த சிந்தனைகள் பெண்ணியக் கருத்துகளுடன் இணைந்து, சமத்துவம், மனித உரிமை மற்றும் சமூக நீதி ஆகிய மதிப்புகளை வலியுறுத்துகின்றன
Shanlax (Sun,) studied this question.