இலக்கிய வகைமைகளுள் குறிப்பித்தக்க ஒன்று கடித இலக்கியம். கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு பவுலடியார் எழுதின கடிதத்தில் இடம்பெறும் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகளைப் பதிவு செ வதாக இந்த ஆ வு அமைகிறது. தனி மனிதனை ஒருங்கிணைத்ததுதான் மானுடம். அவனுக்குக் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. ஓவ்வொரு பொறுப்பில் உள்ளவர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பவுலடியார் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பின்பற்றினால் மானுடம் உச்சநிலையை அடையலாம் என்பதே இந்த ஆ வின் முடிவாக அமைகிறது.
shanlax (Wed,) studied this question.