அறமாவது, “உயிர்களுக்கு இதமான செய்தலும், சத்தியம் சொல்லுதலும், தான தர்மங்கள் செய்தலுமாம்” என்பது பதுமனார் உரை. பண்டையத் தமிழ் இலக்கிங்களுள் “அறம்” என்னும் சொல் “ஒழுக்கம்” என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியர், அறம் பற்றி மிகவும் நுட்பமாகவும் உயர்வாகவும் விளக்கிச் சொல்லியுள்ளார். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்திறன் ஆகுல நீர பிற” (குறள்.34) என்ற திருக்குறள், மனத்துக்கண் குற்றம் இல்லாமல் தூய்மையாக இருப்பதே அறம் என்று விளக்கி, அறத்தின் பெயரால் செய்யப்படுகின்ற மற்ற செயல்கள் அனைத்தும் ஆரவாரத்தன்மை உடையனவாகும். இவற்றை இக்கட்டுரையில் விளக்கமாக காண்போம்.
shanlax (Wed,) studied this question.