இயற்கைப் புணர்ச்சியில் ஆரம்பமாகும் களவினை வரைவு கடாதல் என்ற நிலையே கற்பு நிலைக்கு உயர்த்த வருகின்றது. தலைவன், பாங்கன், தலைவி, தோழி என்ற நிலையில் நின்ற இன்ப வாழ்க்கை மற்றவர் அறிந்தனரோ அல்லது அறியும் முன்னரோ கற்பு வாழ்க்கைக்குத் தலைவியை உடம்படுத்தவும் அவளது களவின்பம் கற்பின்பமாக மாறவும் தோழி எடுக்கும் சீரிய முயற்சியே வரைவு கடாதல் எனக்கூறலாம். களவியலின் முக்கிய பகுதியான வரைவு கடாவுதலை உளவியலுடன் பொருத்தி பார்ப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
shanlax (Wed,) studied this question.