காலத்தாலும் கருத்து நடையாலும் சீர்மையுடனும் சிறப்புடனும் விளங்குவது நம் தமிழ்மொழி. இத்தமிழ்மொழியின் கண் உள்ள இலக்கிய இலக்கணங்கள் கற்போருக்கு இன்பம் விளைவிப்பின. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மொழி இலக்கண இலக்கியங்களில் இல்லாதச் செய்திகளே இல்லை என்று கூறலாம். பைந்தமிழ் புலவன் பாரதியார் கூட உணராமலா கூறினார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று இன்றைய இருபதாம் நூற்றாண்டு காலக்கட்டத்திலே வளர்ந்துவரும் அறிவியல் துறைக்கும் மருத்துவத்துறைக்கும் தொடர்புடைய பல செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்கத்தமிழனின் அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும் மட்டுமின்றி அனு முதல் அண்டம் வரையிலான ஆராயத்தக்க அறிவியல் செய்திகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. மேலும் நவீன கருவிகளுடன் இயங்கும் இன்றைய மருத்துவத்துறையே வியக்கத்தக்க வகையிலான மருத்துவச் செய்திகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. சைவ சமய பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக விளங்கும் திருமந்திரத்தை இயற்றிய திருமூலரின் மருத்துவ அறிவும் அறிவியல் அறிவும் இன்றைய அறிவியல் உலகைய வியக்கச் செய்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் வானியல், மருத்துவம், இயற்பியல், கட்டிடக்கலை என பல்வேறு துறைச்சார்ந்த செய்திகள் பாடல்களில் குறிப்புகளாக உள்ளன. அந்த வகையில் தமிழ் இலக்கியங்களில் உள்ள பல்துறைச்சார்ந்த அறிவியல் செய்தி ஆய்வுப் பொருண்மையாகக்கொண்டு இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Tue,) studied this question.
synapsesocial.com/papers/6a0020eac8f74e3340f9bbf2 — DOI: https://doi.org/10.5281/zenodo.10432461