“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்கிறது புறநானூறு. பண்பாடு ஆங்கிலத்தில் கல்ச்சர் என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றது. இதற்குச் சால்பு, சான்றாண்மை என்றும் கூறுவர். இதனை தமிழில் கலாச்சாரம், நாகரீகம் என்பர். பண்பாடு என்னும் சொல்1937&இல் ரசிகமணி பி.கே.சிதம்பர முதலியாரால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது எனலாம். மேத்யூ அர்னால்டு ஆங்கிலத்தில் இதனை தனிமனிதன் அறிவு, தன் நல்ல பண்பு நலன்களை நிறைத்து யாருக்கும் இடையூறு இன்றி மானுடச் சமுதாயத்திற்கு ஒரு பயனுள்ள வகையில்வாழ்கிறானோ அதுவே பண்பாடு என்று அழைக்கப்படுகின்றது எனலாம். அப்பண்பாட்டு நோக்கில் சங்க காலப் பெண்கள் எவ்வாறு திகழ்ந்தார்கள் என்பதைப் பற்றி இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது எனலாம்.
shanlax (Thu,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: