“திருக்குறளில் உள்ள இசை மற்றும் நடனக்குறிப்புக்கள் - ஓர் பண்பாட்டு இலக்கிய ஆய்வு” என்கின்ற இவ்வாய்வுக் கட்டுரை தமிழரின் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் ஓர் இணைந்த போக்கினை கொண்டது என்பதனை நிரூபிக்கின்றது. தமிழரின் பழமை வாய்ந்த கலைகளுள் முதன்மையானவை இசை மற்றும் நடனக்கலைகள் ஆகும். சங்க காலம் தொட்டு இன்று வரையான காலப் பகுதிகளில் எழுந்த பெருமளவான நூல்களில் இசை பற்றிய குறிப்புக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சில நூல்கள் இவற்றை நேரடியாக முன்வைக்கின்ற அதே வேளை அதிகமான நூல்கள் இசையினூடாக தாம் கூறவந்த விடையங்களைக் கூற முயல்கின்றன. அவ்வாறான ஓர் நூலாகிய திருக்குறளில் காணப்படும் இசை மற்றும் நடனம் தொடபான விடையங்கள், சொற்பயன்பாடுகள், அங்கபாவம் மற்றும் ரசக்கூறுகளின் வெளிப்பாடுகள் போன்றவற்றை ஆய்வுசெய்வதாக அமைகின்றது. இவ்வாறான குறிப்புக்கள்தமிழ்ப்பண்பாட்டின் நெறிகளை பிரதிபலிப்பனவாகவும், கலைத்திறனை சமூகத்தினிடையே அடையாளமிட்டுக் காட்டுபனவாகவும் அமைகின்றன. இவ் ஆய்வானது தமிழ் மொழியின் கலை மற்றும் இலக்கியம் சார்ந்த பாரம்பரியத்தை மீளாய்வு செய்து தற்காலக் கலைஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாணவர்கள் போன்றோர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.
Shanlax (Sun,) studied this question.