மனித இனம் இடத்தாலும் இனத்தாலும் மொழியாலும் சூழல்களாலும் வேறுபடுகின்றது. இத்தகைய மனிதஇனம் ஒரு சமுதாயமாக சேர்ந்து வாழ்கின்ற போது அந்தந்த சமுதாயத்திற்கேற்ப பழக்கவழக்கங்கள், மரபு முறைகள், கலைவடிவங்கள், தத்துவங்கள் ஆகிய வாழ்வியல் மரபுகள் தனித்தனியே தோன்றுகின்றன. இவை காலங்காலமாக அச்சமுதாயத்தை கட்டமைத்து வழி நடத்துகின்றன, அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வரையறுத்து முழுமையாக உள்ளடக்கிக் காட்டுவது வட்டாரமாகும். அதன் இயற்கை சூழலையும், அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் படம் பிடித்து காட்டுவது வட்டார இலக்கியத்தின் அம்சமாகும். அவ்வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சாஞ்சாரம் புதினம் கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை எடுத்தியம்புகின்றன, நாதஸ்வரம் எனும் சொல்லின் பெயராக்கம், கரிசல் நில நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வு, சமூக புறக்கணிப்பு, கரிசல் நில மக்களின் பழமரபுகதைகள், நாதஸ்வரக் கலையின் தொய்வுநிலை போன்றவற்றை விளக்கி கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Shanlax (Sun,) studied this question.