தமிழ் மொழியின் பெருமையினையும், சிறப்பினையும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறையினையும்எடுத்தியம்பும் இலக்கியமாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க கால மக்களின் ஒழுக்கம்மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் அனைத்தும் இன்றைய சமுதாயத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்துவாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது, புலமை சார்ந்த நூற்றுக்கணக்கான புலவர்களின் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது. மொழியியல் வல்லுநர்களை வியக்க வைக்கும் மொழி வளம் கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சங்க காலத்தில் மகளிரின் கல்வி, அறிவு, வீரம், மனத்தின்மை, ஆளுமைச் சிறப்பு, விருந்தோம்பல் பண்பு, எதிர்காலத்தில் பெண்கள் பெற வேண்டிய மாண்புகள் ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறது.
Shanlax (Sun,) studied this question.