திருவள்ளுவர்இயற்றியத் திருக்குறளை உலகப்பொதுமறை என்கிறோம். அனைவரும் அதை விரும்பி கற்கின்றோம். ஆனால் ஒளவை இயற்றிய ஆத்திச்சூடியை குழந்தைகள் படிப்பதற்கு என்றே பெரியவர்கள் இருந்துவிடுகிறோம். ஆத்திச்சூடியை பெரியவர்கள் அனைவரும் ஆழ்ந்து படிக்க வேண்டும். ஆழ்ந்து படித்தால் கவலைகள் காணாமல் போகும். விரக்திகள் ஓடிப் போகும். தாழ்வு மனப்பான்மை தகர்ந்துவிடும். தன்னதம்பிக்கை வளர்ந்துவிடும். திருவள்ளுவர் வாழ்வியல் உண்மைகளை மிக அழகாக தாம் இயற்றியத் திருக்குறளில் எடுத்துக் கூறியுள்ளார். வாழ்வியல் நெறி கற்பிக்கும் அற்புதம் திருக்குறளிலும் ஆத்திச்சூடியிலும் காணப்படுகிறது. இன்றைய தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அனைவருக்கும் ஆணிவேர் திருவள்ளுவர் இயற்றியத் திருக்குறளும் ஒளவையின் ஆத்திச்சூடியும்தான். திருக்குறளை எவ்வாறு ஆழ்ந்து படிக்கின்றோமோ அதுபோல ஆத்திச்சூடியை ஆழ்ந்து படித்தால் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்.
shanlax (Wed,) studied this question.