தமிழ்த்திரைப்பட உலகில் இருபது ஆண்டுகளாக தனக்கென தனியானதோர்இடத்தைப்பிடித்திருக்கும் கவிஞர் வைரமுத்து தமிழ் மக்களின் மனங்களில், எண்ணங்களில் நிறைந்திருப்பவர். புதுக்கவிதைகள் எழுதிப்புகழ்பெற்று அதன் மூலம் திரைப்படத்துறையில் நுழைந்தவர். இவருடைய படைப்புகள் அனைத்திலும் இயற்கை, வேளாண்மை, சமுதாயம், அறிவியல் ஆகியவை கலந்து இருக்கும். கவிஞர் வைரமுத்து இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்தவர். அதனால் வேளாண்மை மற்றும் சுற்றுப்புறச்சூழல்களின் தன்மைகள் குறித்த அறிவு அவருக்கு இயல்பிலேயே இருப்பதால் அவருடைய படைப்புகளில் அறிவியல் செய்திகள் அதிகமாக இடம்பெற்று இருக்கின்றன. மேலும் தற்பொழுது நடப்பது அறிவியல் யுகம். இதனை ஏற்று உள்வாங்கிக் கொள்ளாத எந்த ஒரு இலக்கியமும் கால வெள்ளத்தில் மூழ்கி முகவரி அற்றுப்போகும். அந்த வகையில் கவியரசு வைரமுத்து அவர்கள் அனுபவ அறிவோடு அறிவியலையும் எழுத்தில் கொண்டு வந்து படைக்கும் ஆற்றல் பெற்றவர். அவர்தம்படைப்புகளின் அறிவியல் செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.
shanlax (Tue,) studied this question.