ஆரம்ப காலகட்டத்தில் இலக்கியங்கள் செய்யுள் நடையிலும் கவிதை நடையிலும் தான் தோன்றின. இவ்வகை கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி போன்ற இலக்கணக் கூறுகளைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல், சமகால கவிதைகள் வெளிவருகின்றன. இக்கவிதைகள் நவீன அரசியல் அமைப்பு, ஜனநாயகம், நகர நிர்மாணம், எட்டு வழிச் சாலை, மருத்துவம், இயற்கையின் அழிவு, அடித்தளவர்க்கம், பெண்மை என்ற பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுகின்றன. சமகால கவிதைகள் கூடுதலாக கவிதை மரபைப் புறக்கணித்தல், படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு, வாசகனின் சிந்தனைக்கு இடம் தருதல் ஆகிய கூறுகளை முன்னிறுத்துகின்றன. சமகால கவிதைகள் பொதுவான பிரச்சனைனய விட, தனிமனிதனது நிலையினைக் கூறுவதால் கவிஞனுக்கும், படைப்பாளனுக்கும் இடையிலான உறவு நெருக்கமாகின்றது. தமிழ் ஆய்வு உலகில் சமகால கவிதைகளை அழகியல், பெண்ணியம், நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்னும் பல கோணங்களில் ஆராயப்படுகின்றன. பொள்ளாச்சி இலக்கிய வட்டக் கவிதைகளின் செல்நெறிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. சமூக இருப்பிற்கும், கவிதை உருவாக்கத்திற்கும் இடையில் சமகால கவிதையின் போக்கினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: