தமிழர் வாழ்வு 2000 ஆண்டுகளுக்கு முன்பே வளம் பெற்ற ஒன்று. அவர்களது வாழ்க்கை உலகில் வாழும் மனித இனத்துக்கு மட்டுமின்றி உயிரினம் அனைத்திற்கும் உரிமையாக அமைந்தவை எல்லாரும் இன்புற்று இருக்க நினைக்கும் தமிழர் தம் வாழ்வியலை உண்மை நலத்தை உணர்ந்து உலகுக்கு உணர்த்துபவர்கள் சிலர். அத்தகைய தமிழர் கண்ட சமயங்களில் தொன்மையானவை சைவமும் வைணவம் ஆகும்.சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமயம் சைவ சமயமாகும். அது போன்று திருமால் எனப்படும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் வைணவ சமயம்ஆகும்.இந்த இரண்டு சமய கோட்பாடுகளையும் தத்துவ சிந்தனைகளாக வகுத்து கண்ட பெருமையும் தமிழினத்திற்குரியது. சைவ சமய கோட்பாட்டு சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு மெ#கண்டார் சைவ சித்தாந்தம் என்னும் தத்துவ நெறியை வகுத்தார்.அதுபோல ராமானுஜர் ஆழ்வார்களின் அருட்பாடல்களின் தொகுப்பாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அடிப்படையாகக் கொண்டு விசி ஷ்டாத்துவைதம் என்னும் தத்துவ நெறியை வகுத்தார். இறைவன் என்னும் பொருளை விளக்க எழுந்த பழமொழியே தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதாகும். மாயோன் மேய காடுறை உலகம் என்று தமிழின் தொன்மை நூலாகிய தொல்காப்பியம் கூறுவதால் திருமால் வழிபாடு பழம் தமிழர் வழிபாடு என்பது விளங்கும். மாயோன் என்பது கரிய நிறமுடைய திருமாலை குறிக்கும். திருமால் வேத முதல்வனாக விளங்குகின்றான். ஆன்மா, பொருள், ஈஸ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டது வைணவம்.இது தமிழர்களின் சமயம், கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வாழ்வியல் ருவூலமாக திகழ்கிறது.
Shanlax (Sun,) studied this question.