தமிழியல் ஆய்வுகளில் இலக்கிய வகைகள் குறித்தான ஆய்வுகள் இலக்கிய வரலாற்றின் நெடும்பாதையைப் பகுத்தறிவதற்குப் பெரும் துணை செய்கின்றன. அரசியல், சமூகம் ஆகியவற்றின் மாறுதல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்திலும் பாடுபொருள்கள் மற்றும் இலக்கிய வடிவங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இலக்கிய வகைகளைப் பதிவுச் செ#யும் பொருட்டு பாட்டியல் நூல்கள் தோன்றி அவற்றிற்கான இலக்கணங்களை வகுத்துள்ளன. அம்மானை, வள்ளைப்பாட்டு, குரவை போன்ற பல நாட்டார் விளையாட்டுகள் மற்றும் கலைகள் இலக்கியமாக வடிவெடுத்துள்ளன. இக்கட்டுரை விளக்கமுறை ஆய்வின் வழி குணலை என்ற நிகழ்கலை வடிவம் இலக்கியமாக முகிழ்ந்த வரலாற்றை அடையாளப்படுத்தமுற்படுத்துகிறது. குணலை கூத்து குறித்த இலக்கிய குறிப்புகளை வழங்குவதோடு அவ்வடிவம் இலக்கிய வகையாக உருபெற்ற சான்றுகளை எடுத்துரைப்பது ஆய்வின் நோக்கமாகும்.
Shanlax (Sun,) studied this question.