பெண்ணியத் திறனாய்வு ஆண் வகுத்த கொள்கையில் நின்று பெண் தன் எழுத்தைவெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைமாறி, பெண் தனக்கான எழுத்துச் சட்டகத்தைத் தானே திட்டமிட்டு வரையறுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதனடிப்படையில் எலைன்ஷோவால்டரின் பெண்நிலை நோக்குத் திறனாய்வு குறிப்பிடும் உயிரியல் மாதிரி பெண் எழுத்து மாதிரி வடிவம் பெண்ணின் உடலிலிருந்து வெளிப்படுவதாகவும், பெண்ணின் பாலின வேறுபாடே அதற்கு ஆதாரமாக இருக்கிறது என்றும் கூறுகிறார். பெண் எழுத்தின் உடல் அனுபவங்கள், உயிரியல் வேறுபாடுகள் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை உயிரியல் மாதிரிகள் முன்னிறுத்திப் பேசினாலும், ஆண்களின் இலக்கிய ஆளுமையால் பெண் எழுத்து எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்துகிறது. குறிப்பாகப் பெண்படைப்பு அவளின் எழுத்து மற்றும் படைப்பாற்றலில் எவ்வாறு வெளிப்படுகிறது என்ற இரு நிலைப்பாடுகளை முன்னிறுத்தி உயிரியல் நிலைப்பாடுகளைப் பேசுகிறது. ஷோவால்டரின் பெண்நிலை நோக்குக் கோட்பாட்டின் உயிரியல் மாதிரியை, அகநானூற்றுப் பெண்பாற்புலவரின் பாடல்களோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
Shanlax (Sun,) studied this question.