தமிழ்ச் சமூகம் பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்ட கட்டமைப்பாக திகழ்கிறது. சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தின் பணி இன்றியமையாததாக உள்ளது. இலக்கியத் தோற்றத்திற்குச் சமூக மாற்றம் உறுதுணையாக இருக்கிறது. காலத்திற்கேற்ப இலக்கியமும் சமூகமும் மாற்றம் அடைந்துகொண்டு வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப இலக்கியமும் சமூகமும் தகவமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. படைப்பாளன் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனைகளைப் படைப்புக்குள் புகுத்துகிறார். அந்தச் சிந்தனை, சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திண்ணமாக நம்புகிறார். படைப்பாளன் இலக்கியத்துள் சமூக நிகழ்வுகளையும் பிரச்சினைகளையும் அமைத்துக் காட்டி, அந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளை இலக்கியத்தில் படைக்கிறார். மக்கள் அந்தத் தீர்வுகனை உள்வாங்கிக்கொண்டு செயல்பட்டால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கருதுகிறார். இலக்கிய வகையுள் ஒன்றான புனைகதை, மக்கள் வாழ்வுடன் நெருங்கிப் பயணிக்கும் அமைப்பைக் கொண்டதாகும். அதனால் புனைகதையில் உணர்த்தப்படும் சமூகச் சிந்தனைகள், மக்கள் மூலம் சமூக மாற்றமாக விரிவடைகிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் தனிமனித சிந்தனைகளை உள்ளடக்கிய. தொகுப்பாக விந்தனின் புனைகதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
நீ. பொற்செல்வி (Sun,) studied this question.