செவ்வியல் பண்புகளைக் கொண்ட செந்தமிழ் இலக்கியங்கள் நமது சங்க இலக்கியங்கள். இவை தமிழின் பழமைக்கும், பெருமைக்கும் அதன் தனித் தன்மைக்கும் உரிய உண்மைப்பதிவுகளை தன்னுள்ளே கொண்டுள்ளன. பொது நெறிநோக்கும் மானுடத்தை மகத்துவப்படுத்தும் வாழ்வியல் நெறிகளைக் கொண்டு உயர்ந்த நோக்கங்களையும் வாழ்வியல் பற்றிய ஒழுக்க நெறி களையும் சமூக வாழ்வின் வரையறைகளையும் மனித நேய மாண்புகளையும் உரைக்கும் திறன் உடையன சங்க இலக்கியப்பாக்கள். சங்க கால இலக்கியத்திற்கு சற்றும் குறைவில்லாமல் சமகால இலக்கியங்களான சிறுகதைகளிலும் நம் மானுட பண்புகளையும் அதற்கான கூறுகளையும் காண்கிறோம். அத்தகைய மனிதநேயக்கூறுகள் தி.ஜானகிராமன் படைப்புகள் தோறும் அடங்கி இருப்பதைக் காண்பதே கட்டுரையின் நோக்கம்.
shanlax (Mon,) studied this question.