ஆறறிவு படைத்தவன் மனிதன். அவன் ஒருவனே சிந்திக்கத் தெரிந்தவன். மனிதனின் மனம் எப்படியோ அப்படித்தான் அவனது வாழ்க்கை அமையும். நல்ல மனம் இருப்பின் வாழ்க்கை வளம் பெறும். உள்ளுவததெல்லாம் உயர் உள்ளல் என்பார் வள்ளுவர். நினைவு நலது வேண்டும் என்பார் பாரதி. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை என்பார் சுவாமி விவேகானந்தர், நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே... ஓ மனமே... நீ மாறிவிடு மலையோ, அது பனியோ நீ மோதி விடு...!” என்று வார்த்தை உரம் போட்டு, இன்றைய இளம் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டியர், வித்தகக் கவிஞர் என்று போற்றப்படும் பா.விஜயின் தன்னம்பிக்கைச் சிந்தனையை இவர் தம் பாடல் வழி காண்பது இக்கட்டுரையின் நோக்கம்.
shanlax (Wed,) studied this question.