வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது அவர்களுடைய தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை என்பது “என்னால் முடியும்” என்று நம் மீதும், நம் ஆற்றலின் மீதும் நாம் கொள்ளும் நம்பிக்கை. புதிதாக ஒரு செயலைச் செய்ய முற்படும் போது இது நம்மால் செய்ய முடியுமா? முடியாதா? தவறு ஏற்பட்டுவிடுமா? என்று நினைப்பதும், பேசுவதும் தன்னம்பிக்கை அற்றவர்களின் செயல். முயன்று முன்னேற வேண்டும். அப்போதுதான் நம்பலம், நம் பலவீனம் பற்றிய சுய அலசல் (Self Analysis) தெரியவரும். நம் பலவீனத்தை பலமாக மாற்ற, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள, மாற்றுப் பாதையை கண்டுபிடித்து மோதி முன்னேற முடியும். வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களும், செயல்களும் நம்முடைய தன்னம்பிக்கையை வளர்க்கும். பொதுவாக மக்களிடையே எளிதில் தன்னம்பிக்கையூட்ட, சோர்ந்து போன மனதை ஊக்குவிக்க தூண்டுகோலாக திரைப்படப் பாடல்கள் அன்றும், இன்றும் பெரும் பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் பல கவிஞர்கள் எழுதிய சில பாடல்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Wed,) studied this question.