உலக மொழிகளில் பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே பிறந்த மொழியாகத் தமிழ்மொழி செம்மாந்து திகழ்கின்றது. காரணம் தமிழர்தம் பன்னெடுங்கால வாழ்வியல் முறையில் அமைந்துள்ள பண்பாட்டுச் சிறப்பும் பல்துறை அறிவில் மிளிர்ந்த சிறப்புமே ஆகும். அவ்வகையில் என்று பிறந்தவள் என்று உணர முடியாதவளாகிய எம் தமிழ்த்தாய் மிளிர்ந்திடக் காரணமாகிய பல்துறை அறிவுகளில் குறிப்பாக மருத்துவம் சார்ந்த அவர்தம் அறிவு நுட்பங்களால் கிடைத்துள்ள பதிவுகளின் சிறப்பினைத் தற்போது பல்வேறு கொடிய நுண்உயிர்க்கொல்லி நோய்கள் வருகின்ற போதே உணர முடிகின்றது. அவ்வகையில் தமிழர் பன்னெடுங்காலம் முன்பே அறுவை சிகிச்சை முறையினையும் உணர்ந்து தெளிந்து பழகியுள்ளனர் என்பதன் நுட்பங்களின் சான்றுகளைப் பகிர்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
shanlax (Tue,) studied this question.