மதமிழ் இலக்கியங்களுள் தனித்த சிறப்பினைப் பெற்றுத் திகழ்வன சங்க இலக்கியங்கள். இவற்றுள் எளிமையும் சுருக்கமும் சுவையும் கலந்த இலக்கியங்களுள் தலைமை சான்றது குறுந்தொகை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்குச் நயங்கள் குறுந்தொகையில் மிகுந்து காணப்படுகின்றன. ஒரு படைப்பு எந்த அளவிற்குப் பரவலாக மக்களிடையே புலக்கத்தில் இருக்கின்றதோ அதே அளவிற்கு அதில் பாட வேறுபாடுகளும் இருக்கத்தான்செய்கின்றன. அந்த வகையில் குறுந்தொகையில் இருக்கின்ற 88ஆவது பாடலை எடுத்துக்கொண்டு சொல்லாட்சியையும் பொருண்மை நிலையையும் பதிப்பு வேறுபாட்டையும் ஆரா#வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. நிகழ்த்த வேண்டிய புதிய ஆய்வுக்களங்களும் இக்கட்டுரையில் சுட்டப்படவுள்ளன.
Shanlax (Sun,) studied this question.