கல்தோன்றி மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகவும் அழியாச்சான்றாகவும் விளங்குகின்றது. எத்தகைய தொழில்நுட்பமும் வளராத காலத்தில், பல்வேறு தொழில் துறைகளில் நமது முன்னோர்கள் அளப்பரிய விலாசமான அறிவினை பெற்றிருந்தார்கள் என்று மார்தட்டி கொள்ளக்கூடிய பழந்தமிழர் இலக்கியங்களில் வானியல் அறிவு, வானவெளி அறிவு, கணிதவியல் அறிவு, விண்மீன்கள் பற்றிய அறிவு, மழை பற்றிய அறிவு, . இயற்பியல் அறிவு, மருத்துவ அறிவு என பல்வேறு துறைகளில் பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் அறிவியல் பரவிக்கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்ததை பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. திருக்குறளின் பெருமையை அறிவியலோடு ஒளவை உரைக்கும்போது, அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டகுறுகத் தெறித்த குறள் என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு. அதனை பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஒளவை அறிந்து அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது.
shanlax (Wed,) studied this question.