இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன. இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்தது என்றால் மிகையில்லை. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல் ஒளவை திருக்குறளின் பெருமையை உரைக்கும்போது அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தெறித்த குறள் என்கிறார். அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஒளவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது. இடையின்றி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார். அறிவியல் என்றதுமே நம் நினைவுக்கு வருவது கண்ணாடி குடுவைகளும் நுட்பமான கருவிகள் கொண்ட ஆய்வுக்கூடங்களும் கணிப்பொறி போன்ற அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகளும் தான். ஆனால் ஆதி காலத்தில் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் தன் இரண்டு கால்களையும் ஊன்றி நடக்கத் தொடங்கிய அன்றைக்கே அறிவியல் துளிர் விட தொடங்கிவிட்டது. பண்டைக்காலம் தொட்டு அறிவியல் அறிவும் அறிவியல் சிந்தனையும் தமிழர் சமுதாயத்தில் நிலவி வந்திருக்கிறது. அறிவியல் தமிழ் என்று ஒரு பார்வை அண்மை காலத்தில் மிக வேகமாக பறவை வருகிறது. அதனுடைய நோக்கம் இலக்கியங்களில் மேலைநாட்டு அறிவியல் வல்லுநர்களின் கருது கோள்களை காண முயற்சிப்பதன்று. ஆனால் அதே நேரத்தில் பல அறிஞர்களிடம் அறிவியல் கண்ணோட்டம் இருந்தது என்பதை உணர்த்தும் அறிவியல் செய்திகளை தமிழ் மொழியில் ஆக்கவும்புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Wed,) studied this question.
www.synapsesocial.com/papers/69f44390967e944ac5566bd5 — DOI: https://doi.org/10.5281/zenodo.19511075