மரபு வழியாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை காலம் கடந்தும் நம் தமிழ் மக்கள் கடைபிடித்து வருகின்றனர். ஆதிமனிதன் நாகரீகம் பெற்று நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிக்கத் தொடங்கிய நாட்களில் இயல்பாக அவர்கள் செய்து வந்த செயல்பாடுகள் காலப்போக்கில் பழக்கமாக மாறிவிட்டன. ஒருவரைப் போல செய்கின்ற குணம் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அப்பழக்கத்தைக் கொண்டு செல்ல துணையாக நின்றது. நம் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை மனிதனின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் பற்றிஎடுத்துரைக்கின்றன. படைப்பாளர்களும் தமது படைப்புகளில் நம் தமிழ் கலாச்சாரங்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தற்கால படைப்பாளர்களின் வரிசையில் இடம் பெற்ற பா. ராகவன் அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரைகள் என பல படைப்புகளை படைத்துள்ளார். அவர் தம் படைத்த நாவல்களில் மக்களின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களை கதையோடு இணைத்து கூறியுள்ளார். அவரின் இந்த முயற்சி நம் மக்களிடையே மறையாது பாதுகாக்கப்படும் பழக்க வழக்கங்களை வெளிப்படுத்துவனவாகஇருக்கின்றன.
shanlax (Mon,) studied this question.