அம்பை & இந்த வருடம் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர் சி.எஸ். லட்சுமி என்ற இயற்பெயர் கொண்டவர். அம்பை என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களை வெளியிடுகிறார். மகாபாரத புராணத்தில் அம்பை காலங்கடந்தும் நிற்கும் கதாபாத்திரம். பிதாமகர் பீஷ்மரை வென்றவர் பிறவிகள் கடந்தும் பகைவென்ற அம்பை தனதுஆதர்சன கருத்துக்களுக்கானதோர் குறியீடாகக் கருதியதால் அவரின் பெயரைச் சுடியதாக லட்சுமி தனது நேர்காணலில் பகிர்ந்துள்ளார், தந்தி தொலைக்காட்சி நேர்க்காணல்) மகாபாரத அம்பை போல் மானுடத்து அம்பையும் யதார்த்தத்தின் நிதர்சனமாக நிர்மால்ய தரிசனம் தருகிறார். தான் கண்டவை உணர்ந்தவை உணர்த்த விரும்புபவை கேட்டவை கேட்க நினைப்பவை என அனைத்தையும் படைப் பாக்கியதே அம்பையின் சிறுகதை தொகுப்புகளாகும். இவைகளிலுள்ள ஒவ்வொரு கதையும் பெண்ணியச் சிந்தனைகளைச் சுரியச் சிதறல்களாக ஒளிவரச் செய்கின்றன. அவற்றில் நான்கு படைப்புக்கள் வாயிலாகஅறியலாகும் பெண்ணியச் சிந்தனைகளே இங்கு முன் வைக்கப்படுகின்றன. பெண்மொழி படைப்புக்களின் வெளிப்பாட்டில் ஆண் பெண் என்ற பேதங்களை வாசிப்பின் ஊடாக நாம் கடந்தாக வேண்டியுள்ளது. ஆணின் பார்வையில் அணுகப்படும் பெண்ணியச்சிக்கல்களும் பெண்ணின் பார்வையில் அணுகப்படும் பெண்ணியச் சிக்கல்களும் மாறுபட்டே அமைகிறது. ஆண் படைப்பாளிகன் எழுத்தக்களில் பெண்களைப் பற்றி எழுதலாம், கூறலாம். ஆனால் பெண் உணர்வின் அதன் மீதான வலியும் வேதனையும் அல்லது உணர்வு தரும் மகிழ்வும் பெண்ணினத்திற்கே உரியதாகும். ஆத்மாவினூடான அனுபவங்கள் அளவிடற்கரியன அதனால் பெண்ணைப் பற்றி பெண் எழுதும் போது உயிரோட்டம் கலையப்படும். ஆணுலகம் அறியா பெண்ணலக சேதிகள் பலவாகும். அவற்றைபடைப்பில் கொண்டுவருவது, பெண் மொழியில் பதிவு செய்வது ஈரத்தின் சாரலைஉணர்த்தும். உணர முடியா உணர்வுகள், உணர்த்த முடியா உணர்வுகள் பெண்ணியற்கேஉரிய உணர்வுகள் அனைத்தும் பெண் மொழி படைப்புகளுக்கு சாத்தியமாகும். அரைநூற்றாண்டுகள் கடந்தும் அம்பை எழுத்துக்களின் அடிநாதமாக உள்ள பெண் மொழியே எத்தனை நூற்றாண்டு ஆனாலும் நிறம் மாறா புக்களாய் புத்து நிற்கும். ஆலமரத்து விழுதாய் நிலம் தாக்கும் அனைவரின் நெஞ்சையும் தாக்கும்.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Mon,) studied this question.
www.synapsesocial.com/papers/69f8380b3ed186a7399824cf — DOI: https://doi.org/10.5281/zenodo.14613981