“இருநிலக் கரம்பைப்படுநீராடி” என்று பெரும்பாணாற்றுபடை கூறுகிறது. பெரும்பாலும் மழையை நம்பியே இருக்கும் கரிசல் நிலத்தினை வானம் பார்த்த பூமி என்பர். இப்பகுதி வேளாண் மக்களின் வாழ்வியல் என்பது தனித்தன்மை கொண்டதாகும். இப்பகுதியில்நிறைந்திருக்கும் கரிசல் மண் பற்றி, “விடுநிலக் கரம்பை விடரளை நிறைய” என்று பதிற்றுப்பத்து பதிவு செய்திருக்கிறது. “கன்னங்கரிய எள்ளுப் புண்ணாக்கினைப் போன்றது கரிசல் நிலம்” என்கிறார் கி. ராஜ நாராயணன். மழைக்காலத்தில் மட்டுமே பசுமையாய்க் காட்சி தரும் இப்பகுதி மற்ற காலங்களில் பசுமையின்றி விரித்துப் போட்ட கருப்புக் கம்பளமாய்க் காட்சி தரும். வறட்சியிலும் மழையின் செழிப்பிலும் தங்களை மாற்றிக் கொள்ளாத ஓயாத உழைப்பும், மன உறுதியும் கொண்ட விவசாயிகள் நிறைந்த பகுதிதான் கரிசல் வட்டாரம். கரிசலில் மழை பெ#யும் அழகை கரிய மண் முதலில் ஆவி உமிழ்ந்து புகைகிறது. பின் அதன் உயிர் மணம் வெளிவருகிறது. அந்த மணத்தைக் குறிக்கும் போது தி.ரா “விந்துவின் வாசனை” போன்றது என்று குறிப்பிடுகின்றார். கம்பும், சோளமும், கேழ்வரகும், பருத்தியும் செழிப்பாய் வளர்ந்தாலும் சில மாதங்கள் நிலம் வெறிச்சோடிக் கிடக்கிறது. கந்தக வாசனை நிரம்பிய இந்த கரிசல் பகுதியான கோவில்பட்டி வட்டாரத்தில் பிறந்து சாதனைகள் படைத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத் துறையினர், பத்திரிக்கையாளர்கள், இசைக் கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள் ஏராளம்
shanlax (Mon,) studied this question.