காலங்காலமாக அடிமையாக நடத்தப் பெற்ற பெண் சமுதாயம் இன்றும் சில இடங்களில் அதே நிலையில் இருந்து வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது. பெண்கள் வீட்டிற்குள்ளேயும், வீட்டிற்கு வெளயேயும் (அகம், புறம்) எதிர் கொள்ளும் வாழ்க்கை பிரச்சனைகள் அவற்றிற்கான காரணிகள் குறித்தும் அத்துன்ப நிலையில் இருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்கு மேற்கொள்ளப் பெறும் முயற்சி குறித்தும் தன்னம்பிக்கை குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் மேலை நாட்டில் புதிய சிந்தனைகளும், கோட்பாடுகளும் இந்தியாவில் குறிப்பித்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசியத் தலைவர்கள் பலர் பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்திப் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இராஜாராம் மோகன்ராய் , ஈஸ்வர & சந்திர வித்யாகசர், தேவேந்திர தாகூர், கேசவ சந்திரசென், ஜோதிபா, பைராம்ஜி மலபாரி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, மகாத்மா காந்தி போன்றோர் சதி ஒழிப்பு, விதவை திருமணம், பெண்கல்வி, குழந்தை மன எதிர்ப்பு முதலிய சீர்த்திருத்தங்களுக்காகப் ஈடுபட்டனர். மேலும் பண்டித இரமாபாய் , அன்னிபெசண்ட், சரோஜினி தேவி, ருக்மணி லட்சுமிபதி, முத்துலெட்சுமி ரெட்டி,. கமலா தேவி, சட்டோபாத்யா#, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் மகாகவி பாரதியார், தந்தை பெரியார் பாரதிதாசன், திரு.வி.க போன்ற பலரும் பெண்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்தனர். வேதநாயகம் பிள்ளை, மாதவையா, வ. ராமசாமி போன்றோரும் நவீன இலக்கியங்கள் வழி பெண்விடுதலைக் குறித்து குரல் கொடுத்தனர். அவ்வழியில் அம்பை என்ற புனைப்பெயர் கொண்ட சி.எஸ். லட்சுமி தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண்நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பாரோ என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக, எழுத்தாளர் அம்பை செயல்பட்டு வருகிறார். பெண் ஆளுமைகள் குறித்து ஆவணக்காப்பகமாகவும், ஆய்வுக் மையமாகவும் இற்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும் இவர் சமூக நிலையில் பெண்களின் வரதட்சணை பிரச்சனை, பாலியல் பிரச்சனை, நிறப்பாகுப்பாட்டால் ஏற்படும் பிரச்சனை, பெண்ணின் மன உணர்ச்சிகள், அடக்குமுறைகள் பெண்ணின் போராட்டம் குறித்தும் தம் படைப்புகளில் எடுத்தியம்பியுள்ளார்.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Wed,) studied this question.
www.synapsesocial.com/papers/69fc2c4b8b49bacb8b347e88 — DOI: https://doi.org/10.5281/zenodo.12804535
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: