பக்தி இலக்கிய காலத்தில் ஊழ்வினை, விதி, பாவ புண்ணிய பலன்களை மக்கள் நம்பினர். தன்னம்பிக்கைக்கு பதிலாக இறை நம்பிக்கை, குரு நம்பிக்கை, அரச நம்பிக்கை மிகுந்திருந்தது. தன்னம்பிக்கை என்றச் சொல் உடன்பாட்டு சிந்தனை என்ற பொருளில் கையாளப்பட்டது. இறைவனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு பலர் பல செயல்களில் இறங்குகிறார்கள். அவர்களில் சிலருக்கு வெற்றி கிடைக்கிறது. பலருக்கு தோல்வியே மிஞ்சுகிறது. வெற்றி பெற்றோருக்கு இறை மீது நம்பிக்கை வலுக்கிறது. தோல்வியுற்றோர்க்கு இறை நம்பிக்கை சற்று குறைகிறது. பலமுறை தோல்வி கண்டோர்க்கு இறை நம்பிக்கை என்பது அறவே போய்விடுகிறது. இருப்பினும் தன் மீதும், தம் செயல்கள் மீதும், இது தம்மால் முடியும் என்று தம் மீது தாம் வைத்திருக்கும் உள்ள உறுதிப்பாட்டிற்கும் தன்னம்பிக்கை என்று பெயர். மூடநம்பிக்கைகளின் முழு வடிவமான சாத்திரச் சடங்குகள் மக்களிடையே அறியாமையை மேன்மேலும் வளர்த்தன. இத்தகைய சமூக சூழல்களில் வாழ்ந்த சித்தர்களின் பல பகுத்தறிவு சிந்தனைகளை சித்தர்இலக்கியங்களில் காண முடிகிறது. மூடநம்பிக்கையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக சிவவாக்கியர், பாம்பாட்டி சித்தர், பட்டினத்தார், குதம்பைச் சித்தர், அகத்தியர் போன்றோர் அரும்பாடு பட்டனர். அவர்களுள் பட்டினத்தடிகள் கூறும் தன்னம்பிக்கை என்கிற உடன்பாட்டு சிந்தனைகளைபற்றி இக்கட்டுரையில் காணலாம்.
shanlax (Wed,) studied this question.