சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுவது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் இவ்விலக்கிய நூல்கள் பழந்தமிழரின் நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று வாழ்வியல் நெறியை வகுத்து செம்மையாக வாழ்ந்துள்ளமையை சங்கத்தமிழ் நூல்கள் முலம் அறியமுடிகிறது. சங்கத் தொகை நூல்களுள் & எட்டுத்தொகையில் ஒன்று குறுந்தொகை. இது நல்ல” என்ற அடைமொழி பெற்றுச் சிறந்து விளங்குகிறது. இந்நூல் தமிழர்களிள் வாழ்வியலைப் படம் பிடிக்கும் பெட்டகமாக விளங்குகிறது உவமையழரும் ஊன்றிப் படிப்பார்க்கு இன்பம் ததும்பச் செய்யும் இயல்புடையதாக அமைந்துள்ளது. பூரிக்கோ தொகுத்த குறுந்தொகை வழியே சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் வழக்காறுகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Tue,) studied this question.