மனித குலம் தோன்றிய போதே இயற்கையாகவே காதலும் உலகில் தோன்றிவிட்டது. ஒவ்வொரு நாளும் மனிதனின் சிந்தனைக்கேற்ப காதலின் புரிதல் மாறிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் காதல் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அன்பு, அறம், சமத்துவம், விருப்பு, தேவை என்ற பலதரப்பட்ட உணர்வுகளைக் கொண்ட முழுமையான நீதியின் வடிவமாக காதல் வெளிப்படுகிறது. காதலைப் புகழ்ந்து பாடாத மொழிகளே இல்லையென்றால். அதனை விரும்பாத மனிதனுமில்லை. எங்கெல்லாம் காதல் சிறந்து விளங்குகிறதோ அங்கெல்லாம் அறிவும் அமைதியும் சிறந்து விளங்கும். இயற்கையைப் புரிந்து கொள்ள காதலென்னும் பெரும்பாதையில் மனித குலம் இன்றுவரை பயணிக்கின்றது. காதலையும் இயற்கையையும் குறுந்தொகைச் செய்யுட்களில் அழகுற சங்கப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர். சங்க காலக் காதல் வாழ்வியலை ஆவணமாக்கியுள்ளனர். அறிவியல் பார்வை வழி குறுந்தொகை காதல் என்னும் தலைப்பில் சமகால சமூகம் சந்திக்கின்ற சிக்கல்களும் தீர்வுகளும் இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
shanlax (Tue,) studied this question.