இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துகளை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம். உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக ரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், ராமன் அவதாரங்கள். அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியைப் பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத திகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம்.
shanlax (Tue,) studied this question.