இவ்வாய்வு, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட வாகரைப் பகுதியில் வாழும் வேடர் இனப் பெண்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் பிரச்சி னைகளை சமூக மொழியியல் கோணத்தில் ஆய்வு செய்கிறது. நாட்டின் தொன்மை சமூகமான வேடர்கள், தங்கள் பாரம்பரிய வாழ்க்கைமுறையை இழந்து. பிந்தைய போர் சூழலிலும், பொருளாதார உலகமயமாதல் சூழலிலும் புதிய சமூகச் சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வேடர் இனப் பெண்கள், பால்நிலை அடிப்படையிலான அநீதி, கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் பின்தங்குதல், வேலைவாய்ப்புகளின் பற்றாக்குறை, கலாசார அடையாள இழப்பு. மற்றும் அரசியல் பிரதிநிதித்துவமின்மை போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாய்வு, அவர்களின் நிலையை சமூக அமைப்பியல், பண்பாடு பொருளாதார மற்றும் பாலின நோக்குகளில் ஆராய்கிறது. ஆய்வின் முடிவில், வேடர் பெண்களின் சமூகநிலை மேம்பாட்டிற்கான பரிந்துரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன
Shanlax (Sun,) studied this question.