அறிவியல் மனிதனின் படைப்பாற்றல் திறனுடன் சமூகத்தின் பயன்பாட்டில் அமைந்துள்ள விதிமுறைக்கோடலின் வெளிப்பாடாக அமைகிறது. அத்தகைய அறிவியல் ஆக்க சக்திகளுக்காகப் பயன்பட்டு வருகிறது. அறிவியல் கல்வி படித்து அதன்வழி பொருளீட்டுவதற்கு மட்டுமல்லாது வாழ்க்கை முறையிலும் படைப்பாற்றல் திறனுடன் அமைத்து வாழ்தல் சிறப்பானது. அறிவின் நுண்மையே அறிவியலாகும். பழந்தமிழர் காதலையும், வீரத்தையும் அன்றி அறிவியலையும் சிந்தித்தனர் என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. சீவக சிந்தாமணி தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். திருத்தக்கத்தேவர் எழுதிய இக்காப்பியம் புத்த மதக் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இது காப்பியங்களிலும் ஆளுமை பெற்றுத் திகழ்கின்றது. இந்நூலில் காணப்படும் அறிவியல் செய்திகளை வெளிக்கொணர்வது இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
shanlax (Wed,) studied this question.