தனிமனித அற விழுமியங்களின் வழித் தன் வாழ்வினைக் கட்டமைத்துக் கொண்ட மனிதன் அத்தனிமனித மாண்புகளின் வழிப் பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களைப் பயன்படுத்திப் பார்க்கும் பணிமனையே இல்லறம் என்பது ஆகும். மனிதன் தன்னலம் நீத்து, மனைவி, குழந்தைகள், உறவினர் எனப் பிறர் நலம் கருதி வாழும் மனிதனாய் ஏற்றம் பெருவதில் இல்லறத்தின் பங்கு மிகச்சிறப்பிற்குரியதாம். இவ் இல்லறத்தின் மூலம் மனிதன் கொண்டும் கொடுத்தும் கற்ற மாண்புகளே அம்மனிதனின் சமூகச் செயல்பாடுகளுக்கு அச்சாணியாய் அமைகின்றன. எனவே தான் மனிதன் ஆற்றுப்படுத்தத் தோன்றிய இலக்கியங்கள் இல்லற விழுமியங்களையும் வரையறுத்துஉரைக்கின்றன. அத்தகைய சிந்தனையின் அடிப்படையில் தமிழ் அற இலக்கியங்களிலும் திருவிவிலியத்திலும் காணப்படும் அறம் சார்ந்த இல்லற விழுமியங்களை ஆய்ந்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.
shanlax (Mon,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: