மனித வாழ்க்கையில் அரசியல் என்பதுபல்வேறு நிலைகளிலும் பரவி நிற்கும்பண்பாடாகும். இதனை மனிதனிடமிருந்துஎளிதில் பிரித்துவிட முடியாது. அரசியல்என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் வரையறைஎனவும் கூறலாம். குடும்ப அமைப்பு தொடங்கிஎல்லாவித அமைப்பின் பின்னணியிலும்இவ்வரசியல் ஊடுருவி நிற்கிறது. மனிதன்தன் ஒழுக்காற்றிலிருந்து தவறாமல் கூட்டம்கூட்டமாக ஒன்றிணைந்து நிற்க அரசியல்சிந்தனை ஒரு காரணமாக அமைந்தது. மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரையிலும் இவ்வரசியல் சிந்தனை ஆழமாகவேரூன்றிய காணப்படுகின்றது. குழுக்களாகவாழ்ந்த மனிதன் தன் ஆளுமையை நிலைநாட்டுவதற்கு போராடினான். அப்போராட்டத்தில்சுயநலச் சிந்தனை தோற்றம் பெற்றதாகக்கொள்ளலாம். இச்சுயநலச் சிந்தனையின்அடிப்படையில் கவிஞர் இலக்குமிகுமாரன்ஞானதிரவியம் அவர்களின் “பெருநயப்புரைத்தல்” கவிதையில் இடம்பெற்ற அரசியல்சிந்தனைகளைக் காணலாம்.
shanlax (Mon,) studied this question.