ஆதிகால மனிதன் நாடோடிகளாகவும் ஆற்றுக்கரையோரங்களில் தங்கி தனக்கானதை தானே தேடிக் கொள்ளவும் இயற்கை மற்றும் விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் தன் வாழ்வியலோடு பல போராட்டங்களை மேற்கொண்டான். அத்தகைய போராட்டங்களை அடுத்தடுத்து அவனது கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தியது. மனிதனுடைய கருத்தினை கவரக்கூடியதாக வானில் நிகழும் நிகழ்வுகள் உள்ளன. அவ்வாறு கவர்ந்து ஈர்க்கக்கூடிய வானியலைப் பற்றி நில எல்லை, வான் பரப்பு, காற்று, மழை விண்மீன்கள், மின்னல் என இயற்கையை வைத்தே மனிதன் தன் அகமனத்தின் வழி வியந்து சிந்தித்தான்.அவ்வாறு சிந்தித்துத் தோன்றும் கருத்தினைத் தான் இயற்றும் இலக்கண இலக்கியங்களின் வழி பதிவு செய்தான். அவ்வாறு பதிவு செய்த நிகழ்வுகள் அறிவியல் உலகிலும் வியப்புக்குரியதாகத் தோன்றுகின்றன
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: