இயற்கையாய் வளரும் மரம், செடி, கொடி ஆகியவற்றின் வேர்கள் எப்படி மண்ணில் மறைந்து அவ்வேரின் விதையும், முளையும் காண்பதற்கு அரிதாக இருக்கிறதோ அதுபோன்றே தமிழ்மொழியின் சொற்களின் கூட்டத்திற்கும் வேர்க் காண்பதும் அரிதிலும் அரிது. பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் வழக்குமொழியாகவும், எழுத்து மொழியாகவும் வாழும் மாந்தனின் மொழி தமிழ். அத்தகைய தமிழ் மொழி தோன்றிய காலத்திலிருந்து ஒரே மாதிரியான தன்மையில் இல்லை. மொழி தோன்றிய காலத்தில் சில நூறு சொற்களைப் பயன்பாட்டில் கொண்ட தமிழ்மொழி நாளடைவில் வளர்ந்தும் தேய்ந்தும் சிதைந்தும் திரிந்தும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டன என்பது யாவாரும் அறிந்ததே. இன்று பல ஆயிராம் சொற்கள் தமிழ் மொழில் வழக்கத்தில் வாழ்கின்றனவென்றால், அதற்கு வேர்க்காண்பது எளியசெயல் அன்று. மொழியாகிய பெருங்கடலில் மூழ்கி அவற்றுள் ஐம்பத்து நான்கு வேர்ச் சொற்களைப் பாவணர் கண்டறிந்துள்ளார். வேர்ச்சொற்களை காண்பதற்கு பாவாணர் கண்டறிந்த ஆய்வு நெறிமுறைகளை அறிய முற்படுகிறது இக்கட்டுரை.
Shanlax (Sun,) studied this question.