தமிழகத்தின் ஐவகை நிலங்களுக்கான கடவுளர்களாகக் குறிப்பிடப் படுபவர்கள் அந்தந்த நிலங்களின் மிக மூத்தோரே! குறிஞ்சி-சேயோன் / முருகன், பாலை-கொற்றவை, முல்லை-மாயோன், மருதம் -வேந்தன், நெய்தல்-வருணன். தொடக்கத்தில் குறிஞ்சி நிலக் குறவர் குடியினர், திறந்த வெளிகளில் வேலை வைத்தும், பின்னர் நடுகல் வைத்தும் தங்கள் குல மூத்தோனாகச் சேயோன் முருகனை வழிபட்டனர். பிறகு மலைகள் தோறும் முருகனுக்குக் கோவில்கள் அமைத்து வழிபட்டனர். ஆரியப் பிராமணர்கள் அரசர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட செல்வாக்கால் கோவில்களைக் கைப்பற்றினர். தமிழ்க் கடவுளாக இருந்த முருகன், ஆரிய ஸ்கந்தனோடு கலக்கப் பட்டு, சுப்ரமணியன், ஆறுமுகன், கார்த்திகேயன் போன்ற ஸ்கந்தப் பெயர்களும் அவனுக்கு வழங்கப் பட்டன. முருகனின் காதல் மனைவி குற வள்ளி, ஸ்கந்தன் மனைவி தெய்வானைக்கு இளைய சகக் கிழத்தி ஆக்கப் பட்டாள். முருகனது உண்மையான வரலாற்றையும், ஆரிய இழி பிறவி ஸ்கந்தன் அவனோடு கலக்கப் பட்டது குறித்தும், இந்த இழி நிலையில் இருந்து முருகன்-வள்ளியைக் மீட்கவேண்டியதை உலகிற்கு, குறிப்பாகத் தமிழர்களுக்குக் கோரிக்கையாக வைத்தும் இந்தக் கட்டுரை உருவாக்கப் பட்டுள்ளது.
Shanlax (Sun,) studied this question.