சமூகத்தில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகள், சமூகத்தில் வழங்கப்படும் மொழியில் பிரதிபலிக்கப்படுவது இயல்பு. அந்த வகையில் ஏற்றத் தாழ்வுகளில் ஒன்றான சிறப்பு(மரியாதை) ஒருமைப் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. சிறப்பொருமை பயன்படுத்துவது சமூக உயர்வின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் உயர்ந்தோர் சிறப்பொருமையாலும், தாழ்ந்தோர் ஒருமையாலும் குறிக்கப்படுவது உலகவழக்கு. இத்தகைய சிறப்பொருமை வழக்கு திருக்குறளில் தலைவன், தலைவி குறித்த ஆக்கப்பெயர்களில் காணப்படுகின்றது. அதோடு, தலைவன், தலைவி குறித்த கருத்துக்கள் இடம்பெறும் குறட்பாக்களின் வினைமுற்று விகுதிகளிலும் காணப்படுகிறது. இவ்வழக்கினைத் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்புகள் கருத்தில் கொண்டுள்ளனவா என்பதை ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.
Shanlax (Sun,) studied this question.