தமிழ்ச் சமூக களங்களில் இடம்பெறும் மானிடவியல் ஆய்வுகள் தமிழர் மானிடவியல் ஆகும். இத்துறையை முதலில் ஆராய்ந்தவர்கள் ஐரோப்பியர்களே ஆவர். இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ இருந்தன. பின்னர் தமிழர்களும் மானிடவியல் அணுகுமுறைகளையும், இத்துறையின் கோட்பாடுகளையும் தமிழ்ச் சூழல்கள் ஆய்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றார்கள். முதலில் தமிழியல், நாட்டரியல் துறைகளிலும் பின்னர் சாதி, சாதியம், சமூக அசைவியக்கம், அலைந்து சூழ்வியல் என பல முனைகளிலும் மானிடவியல் பயன்படுகின்றது. பக்தவத்சல பாரதிக்கு மானுடவியல் ஆய்வு மீதான ஆர்வம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மானுடவியல் படிக்கும் காலத்திலேயே தொடங்கியது. கல்லூரி நாட்களில் சிறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1982&ல் தொடங்கிய ஆய்வு பணி 1985&ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் களஞ்சிய மையத்தில் பணியாற்ற தொடங்கிய போது முறைமை கண்டது. தமிழர் மானிடவியல் பற்றிய ஆய்வுகளுக்கும், தமிழில் மானிடவியல் பற்றிய தகவல்களுக்கும் பக்தவத்சல பாரதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை. இவருடைய மானுடவியல் நூல்கள் இத்துறையில் தகுந்த விரிந்த புரிதலைத் தரவல்லவை. பக்தவத்சல பாரதி தமிழ் சமூகத்தின் மானுடவியலை அறிமுகம் செய்யும் வகையில் அறிமுகம் நூலாக எழுதிய பண்பாட்டு மானுடவியல் 1990&ம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் பக்தவத்சல பாரதி எழுதிய முதல் ஆய்வு நூல். பின் தமிழர் மானுடவியல், மானிடவியல் கோட்பாடுகள், வரலாற்று மானுடவியல், இன்றைய தமிழ்ச் சமூகம் என மானுடவியல் சார்ந்து இருபதிற்கும் மேலான நூல்களை ஆய்வு செய்து எழுதினார். பக்தவத்சல பாரதியின் மானுடவியல் நூல்களில் ஒன்றான தமிழர் மானுடவியல் நூலின் கட்டமைப்புகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
shanlax (Mon,) studied this question.