இலக்கியங்களில் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளும், அவர்களின் பண்பாட்டு கலாச்சாரங்கள் சார்ந்த நிகழ்வுகளும், வாழ்வியல் சார்ந்த போராட்டங்களும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் மக்கள் தங்கள் வாழ்ந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்த கலாச்சாரம், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளை, தாங்கள் தற்சமயம்வாழ்கின்ற இடங்களிலும் அவற்றைப் பின்பற்றுகின்றனர். இதற்குக் காரணம் தலைமுறைகளை தாண்டி கடத்தப்படுகின்ற ஒரு கலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முற்படும்போது, அவை காலம் தாண்டி நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தொடக்க காலத்தில் வாய்மொழி இலக்கியமாக இருந்த கூத்து, தற்போது கூத்து நாடகம், சிறுகதை, நாவல் என பல்வேறு இலக்கிய வடிவங்களில் இருந்தாலும், ஒரு கலையை நிகழ்த்த காட்டும்போது மட்டுமே அக்கலையானது உயிர்ப்பு பெற்று முழுமை அடைகின்றது. அவ்வகையில் எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்று வழித்திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தையாக எழுத்தாளர் ராஜூமுருகனின் ஜிப்ஸி என்ற பயண நூலில் நாடோடிகளின் மக்களின் வரலாற்றையும், வாழ்க்கை முறையும் எடுத்துரைப்பதாக இவ்வாய்வு அமைகிறது.
shanlax (Wed,) studied this question.