மானுடம் மனித இனத்தின்ஆதாரமாகும். மனிதத் தன்மையே மானுடத்தின் வெளிப்பாடு. எனவே தான் நம் அருந்தமிழ் இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் மானுடத்தை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய மானுடத்தால் நம் பண்டைய நாகரிகம், மக்கள் பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் அறிந்து கொள்ளமுடிகிறது. சங்க காலம் முதலாக தற்காலம் வரையில் பல இலக்கியங்களில் மானுடத்தின் விழுமியங்கள் பேசப்பட்டுள்ளன. அவ்வகையில் நவீன கவிதைகளில் மானுடம் இடம்பெற்றுள்ள விதம் சிறப்பிற்குரியது. இலக்கியங்களில் பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் காலம் முதலாக பல்வேறு கவிஞர்கள் மானுடத்தை விளக்கியுள்ளனர். அவர்களுள் மகாகவி மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து தருணங்களிலும் மனிதத்துவம் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை பாரதியார் வரிகளின் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாரதியார் கவிதைகளில் மானுடம் இடம்பெற்றுள்ள தன்மையை ஆராய்ந்து விளக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும்
shanlax (2025) studied this question.