உலக உயிர்களில் மனிதன் தனித்துவமானவன். அவனுக்குள் எழும் தன்னம்பிக்கை உலகின் எந்த ஒன்றையும் ஆக்கவும் அழிக்கவும் செய்யும். எனவேதான், மனிதன் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு சர்வவல்லமையோடு உலகியலை ஒவ்வொரு கணமும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறான், புத்துயிர்ப்பு ஊட்டிக் கொண்டிருக்கிறான். அசாதாராண சூழலை அவ்வப்போது உருவாக்கி இன்றைய அறிவியல் யுகத்தில் புதுவித கண்டுபிடிப்புகளால் உலகத்தைப் புரட்டியும் போட்டுக் கொண்டிருக்கிறான். இப்படியான மனித வாழ்வியல் வரலாறு நெடுகிலும் தன்னம்பிக்கையைச் சுற்றியே வரையறை செய்யப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையை மையமாகக் கொண்டுதான் பன்னெடுங்காலமாக ஒவ்வொரு தனிமனிதரும் அல்லது குழுவினரும் இன்றளவும் உயிர்ப்போடு இயங்குக் கொண்டிருக்கின்றனர். தன்னம்பிக்கையற்ற மனிதர்கள் வாழத்தகுதியற்றவர்களாக வாழ்வினோட்டத்தினின்று புறந்தள்ளப்படுவார்கள். அல்லது அடையாளமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். வாழ்வே அவர்களை இருந்த வடு தெரியாமல் நிர்மூலமாக்கிவிடும். எனவே, மனிதன் தன் பிறப்பின் பொருட்டு அன்றாடம் சந்திக்கும் சவால்கள், சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள், பெறத்துடிக்கும் இன்பங்கள் என்பன போன்ற உணர்ச்சிப் பெருக்கை எதிர்கொண்டு வாழ தன்னம்பிக்கை என்பது மிகமிக அவசியமானதாகும். அவ்வாறான தன்னம்பிக்கை குறித்து உலகச் சமயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நெறியினின்று தத்தம் ஆதரவாளர்களுக்கு அல்லது தத்தம் சமய நம்பிக்கையாளர்களுக்கு தன்னம்பிக்கை வரிகளை வார்த்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் இறைமொழியால் அருளப்பட்டு பெருவாரியான மக்களால் பின்பற்றப்படும் இஸ்லாம் காட்டும் தன்னம்பிக்கை குறித்த ஆக்கங்களை இவ்வாய்வு பின்வருமாறு அலசுகிறது.
shanlax (Wed,) studied this question.