ஆறறிவு படைத்தவன் மனிதன், அவன் ஒருவனே சிந்திக்கத் தெரிந்தவன். மனிதனின் மனம் எப்படியோ அப்படித்தான் அவனது வாழ்க்கை அமையும், நல்ல மனம் இருப்பின் வாழ்க்கை வளம் பெறும். “உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்” என்பார் வள்ளுவர். “நினைவு நல்லது வேண்டும்” என்பார் பாரதி. வித்தகக் கவிஞர் பாவிஜய் “ஒவ்வொரு பூக்களுமே” என்ற திரை இசைப்பாடல் வழி தன்னம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை மக்கள் மனத்தில் பதிய வைத்தார். அவரது கவிதைகள் தன்னம்பிக்கை ஊட்டுவன “நம்பிக்கையுடன்” என்ற இவரது கவிதைப்படைப்பு மக்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்க வேண்டும் என்கிறார். என்னால் இதைச் செய்து முடிக்க முடியும் என்று நம்புவது தனிமனிதனின் நம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கைச் சிந்தனையை இவர் தம் பாடல்வழி காண்பது இக்கட்டுரையின் நோக்கம்.
shanlax (Wed,) studied this question.