கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது தமிழின் பெருமையைப் பறைசாற்றும் முதுமொழியாகும். தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையினையும் நடைமுறை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைத் தெரிவிப்பதோடு அக்கால மக்களின் வாழ்வியல் சூழல்களைப் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாகவும் திகழ்கிறது. அவ்வகையில் வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்னும் பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க உலக மக்கள் நல்வழியில் நடக்க ஏற்ற அறிவுரைப் பகறும் நூல் திருக்குறள். தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்னும் நாமக்கல்லார் சொற்படி தமிழன் பெருமையை உலகறியச் செய்தவர் முதற்பாவலராகிய வள்ளுவப் பெருந்தகையே. அவர் இயற்றிய திருக்குறளில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துக்களையே இவ்வாய்வுக் கட்டுரை விவரிக்கின்றது.
shanlax (Tue,) studied this question.