Historical analysis reveals scientific elements in ancient Tamil literature, highlighting cultural advancements.
பண்டையத் தமிழ்ச்சான்றோர்கள் சங்க காலந்தொட்டே பல்வேறு இலக்கிய வகைகளையும், இலக்கண நூல்களையும் படைக்கும் பேராற்றல் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் படைத்த இலக்கியங்களில் அக்கால மக்களின் வாழ்வியல் முறைகளும், நாகரிக மேம்பாடு போன்ற செய்திகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறு இடம் பெற்றவற்றுள் அறிவியல் சார்ந்த கண்ணோட்டமும் அடங்கும். கண்டுபிடித்தல் என்பது மனிதனின் தினத்தேடலாகியது. தேடித் துருவிப் புதியது செய்தல் மனித இயல்பு. இவ்வறிவு நிலை மனிதனை உயர்ந்த நிலையில் வைக்கிறது. அனுதினமும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவனவாக அமைந்துள்ளன. பண்டையத் தமிழ்இலக்கியமான சங்க இலக்கியத்தில் அறிவியல் கூறுகள் நிரம்பக் காணப்படுகின்றன. சங்கப் புலவர்கள் அறிவியலில் மிளிர்வதை எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாடல்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2023) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: