நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் பண்பாட்டுக் கூறுகளில் நம்பிக்கையும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நாட்டுப்புற நம்பிக்கைகள் தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன. ஒன்றை செய்தால்; செய்யாமல் விட்டால் ஏற்படுகின்ற விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கைகள் தோன்றுகின்றன. வறண்ட நிலத்தைக் கொண்ட மக்களுக்கு இந்நம்பிக்கைகள் மிகுதியாக இருக்கும் என்பது அறிஞர்களின் கருத்து. கரிசல் பூமியான மேலாண்மறைநாடு கிராமத்தினர் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை, மேலாண்மை பொன்னுச் சாமி தனது சிறுகதைகளின் வழியே பேசியிருக்கிறார். அந்நம்பிக்கைகளில் காணப்படும் மூடத்தனத்தையும் தனது மார்ச்சியச் சிந்தனையால் நகையாடவும் செய்திருக்கிறார்.
shanlax (Tue,) studied this question.