படைப்புகள் பொழுது போக்கினை மட்டும் அடித்தளமாகக் கொள்ளாமல் வாழ்வியலின் முக்கியக் கூறுகளை வெளிப்படுத்தி நிற்பதையும் காணலாம். இக்கூறுகளில் முக்கியமானது சமூகம் என்றும் கூறலாம். சமுதாயம் என்பது பல்வேறு கட்டமைப்பில் பயணித்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள போராடிய மக்களைப் பற்றிக் கூறுவதாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைப் பின்பற்றி குழுவாக வாழும் மக்களமைப்பைக் கொண்டது. மனிதன் தோன்றிய காலம்முதல் தனக்கான அங்கீகாரத்தை எட்டிப் பிடிப்பதற்கு பல இனக் குழுக்களுடன் இணைந்தும் பிணைந்தும் நடைபோடுகிறான். இந்த இனக்குழுக்களில் ஒவ்வொரு இனக் குழுவிலும் ஒவ்வொரு விதமாக வாழ்க்கை வட்ட சடங்கள் என்பது நடைபெறும். இச்சடங்குகள் சமூகம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சி நிலையை குறிப்பதாகவும், இவ்வகையில் சமகால படைப்பாளரான இலக்குமி குமாரன் ஞானதிரவியம்அவர்களின் படைப்பான “அகஒட்டு” நாவலில் இடம் பெற்றுள்ள சடங்குகளைக் காணலாம். கால ஓட்டத்தில் இச்சடங்குகள் பல இடங்களில் பின்பற்றப்படாவிட்டாலும், அவைநம் பண்பாட்டையும், மானிட வாழ்வையும் பிரதிபதிப்பவையாக அமைகின்றன. சமூகம் என்பதற்கு பல்வேறு ஆசிரியர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
shanlax (2025) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: