பல மனிதர்கள் சேர்ந்து வாழும் அமைப்பு சமுதாயம் எனப்படும். மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், காற்று ஆகியவை தூய்மையாக இருப்பது அவசியம். மனித வாழ்விற்கு ஐம்பூதங்களின் செயல்பாடுகள் சீராக அமைந்திருத்தல் அவசியம் செயற்கைப் பொருட்களினால் நாளுக்கு நாள் இயற்கை வளங்கள் சீரழிந்து வருகின்றன. நிலத்தின் இயல்பிலும் மனித வாழ்வின் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியா என்பது ஒரு வல்லரசு என்று நாம் பல்வேறு விதமாக அறிவித்தாலும் நாம் இன்னும் வல்லரசு கிடையாது. நாம் இன்றுவரை வளர்கின்ற ஒரு மூன்றாம் உலக நாடு தான் என்பதை இந்த புதினம் இரத்தமும் சதையுமான எளிய உண்மையான மனிதர்கள் மூலம் உறுதிப்படுத்துகின்றது. ஒரு மூன்றாம் உலக நாடு உறுதி, திடம், மொழி, பண்பாடு, திமிர், கலை, இலக்கியச் செறிவு, முதுசொல் இவற்றை மொத்தமாக ஒரு சங்கிற்குள் ஊற்றிய ஊழிப் பெருங்கடல் மூன்றாம் உலகப் போர்.இப்புதினம் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர், புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராக தொடுத்திருக்கும் போர் என்கின்ற கருவை சுமைக்கின்றது இப்புதினம். போர் என்பது தமிழர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ஆனால் இது கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளிடம் மோதுகின்ற போரல்ல. மூன்றாம் உலகப் போரினால் இயற்கை விவசாயமும் இயற்கையும் எவ்வாறு மாசுபடுகின்றது என்பதையும் அவற்றை எவ்வாறு பதுகாக்க வேண்டும் என்பதையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Tue,) studied this question.
www.synapsesocial.com/papers/69fd7f4fbfa21ec5bbf07c3c — DOI: https://doi.org/10.5281/zenodo.10432328
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: